கர்நாடகா : தப்பிப் பிழைக்கும் தேவேகவுடா, மல்லிகார்ஜுன கார்கே!

குல்பர்கா தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவராக உள்ள மல்லிகார்ஜுன கார்கேவும், காங்கிரசிலிருந்து விலகி, பாஜகவில் அண்மையில் இணைந்த உமேஷ் ஜாதவும் களத்தில் உள்ளனர். இத்தொகுதியில் மல்லிகார்ஜுன கார்கே மீண்டும் வெற்றி பெறுவார்.
 | 

கர்நாடகா : தப்பிப் பிழைக்கும் தேவேகவுடா, மல்லிகார்ஜுன கார்கே!

தென்மாநிலங்களில் கேரளத்தையடுத்து தேசியக் கட்சிகள் ஆளுமை செலுத்தும் மாநிலமாக கர்நாடகம் திகழ்கிறது. இம்மாநிலத்தில்  மொத்தமுள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் பாஜக 19 இடங்களிலும், காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளக் கூட்டணி 8 இடங்களிலும் வெற்றி பெறும். மீதமுள்ள ஒரு இடத்தில் பாஜக ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளரான பிரபல நடிகை சுமலதா வெற்றி பெறுவார் என நியூஸ்டிஎம்- இன் மாநிலவாரியான கருத்துக்கணிப்பு ஏற்கெனவே தெரிவித்துள்ளது.

இதில் தொகுதிவாரியான வெற்றி நிலவரத்தை பார்க்கும்போது, குல்பர்கா தொகுதியில் காங்கிரஸ் கட்சியின்  மக்களவைத் தலைவராக உள்ள மல்லிகார்ஜுன கார்கேவும், காங்கிரசிலிருந்து விலகி, பாஜகவில் அண்மையில் இணைந்த உமேஷ் ஜாதவும் களத்தில் உள்ளனர். இத்தொகுதியில் மல்லிகார்ஜுன கார்கே மீண்டும் வெற்றி பெறுவார்.

இதேபோன்று, தும்கூர் தொகுதியில் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில், முன்னாள் பிரதமர் தேவேகவுடா போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் பி.என்.பச்சிகௌடா களத்தில் உள்ளார். இத்தொகுதியில் தேவேகவுடா வெற்றிவாகை சூட உள்ளார்.

அதேசமயம், சிக்பலாபூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக உள்ள முன்னாள் மத்தியமைச்சர் வீரப்ப மொய்லி இத்தொகுதியில் தோல்வியை தழுவ உள்ளார்.  இங்கு பாஜக வேட்பாளரான பி.என்.பச்சிகௌடா வெற்றி பெறுவார்.

வடகர்நாடகா மக்களவைத் தொகுதியிலும், பெங்களூரு வடக்கு தொகுதியிலும் பாஜக வெற்றிக்கனியை பறிக்க உள்ளது. இத்தொகுதிகளில் முறையே தற்போதைய மத்திய அமைச்சர்களான அனந்த்குமார் ஹெக்டே, டி.வி.சதானந்த கௌடா ஆகியோர் வெற்றிபெற உள்ளனர்.

குறிப்பாக, மாண்டியா தொகுதியில் வேட்பாளராக களமிறங்கியுள்ள, கர்நாடக முதல்வர் குமாரசாமி மகனான நிகில் குமாரசாமிக்கு  இங்கு தோல்வி காத்திருக்கிறது. இத்தொகுதியில் பாஜகவின் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளரும், பிரபல நடிகையுமான சுமலதா வெற்றிவாகை சூடவுள்ளார் என நியூஸ்டிஎம் கணித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP