நாளை காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு: கர்நாடக சபாநாயகர் அறிவிப்பு!

கர்நாடக சட்டப்பேரவையில் நாளை காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று சபாநாயகர் ரமேஷ் குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
 | 

நாளை காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு: கர்நாடக சபாநாயகர் அறிவிப்பு!

கர்நாடக சட்டப்பேரவையில் நாளை காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று சபாநாயகர் ரமேஷ் குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

கர்நாடகாவில் கடந்த வாரம் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் குமாரசாமி அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா நேற்று முன்தினம் மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.

தொடர்ந்து, சட்டப்பேரவையில் நாளை(ஜுலை 29) நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது. . 

இந்நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ஏற்கனவே 3 பேரை தகுதி நீக்கம் செய்த நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மேலும் 14 பேரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ் குமார் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் நடப்பு சட்டப்பேரவை பதவிக்காலம் முடியும் வரை(2023ம் ஆண்டு மே மாதம்) தேர்தலில் போட்டியிட தடை விதித்துள்ளார். 

இதையடுத்து, சட்டப்பேரவையில் தகுதி நீக்க எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 17 (காங்கிரஸ்-10, மஜத -3, சுயேட்சை -1)ஆக அதிகரித்துள்ளது. 

இதன் தொடர்ச்சியாக, நாளை காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்றும்  வாக்கெடுப்பில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் தவிர மற்ற அனைத்து எம்.எல்.ஏக்களும் கலந்துகொள்ளுமாறும் சபாநாயகர் அறிவுறுத்தியுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP