பிரதமர் மோடியுடன் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா சந்திப்பு!

கர்நாடக முதலமைச்சராக பொறுப்பேற்றதையடுத்து எடியூரப்பா இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.
 | 

பிரதமர் மோடியுடன் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா சந்திப்பு!

கர்நாடக முதலமைச்சராக பொறுப்பேற்றதையடுத்து எடியூரப்பா இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். 

கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியுற்றதை அடுத்து, எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு ஆட்சி அமைத்துள்ளது. கடந்த ஜூலை 26ம் தேதி எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்றார். கர்நாடக அமைச்சரவை குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். பிரதமரிடம் வாழ்த்து பெற்ற அவர், கர்நாடக அமைச்சரவை குறித்தும் பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதனால் இன்னும் ஒரு சில நாட்களில் கர்நாடக புதிய அமைச்சரவை அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP