காங்கிரஸின் வெற்றியை வருத்தமுடன் தெரிவித்த கமல்நாத்!!

மத்திய பிரதேசத்தில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சபாநாயகராக ஆளுங்கட்சியைச் சேர்ந்தவரையும், துணை சபாநாயகராக எதிர்க்கட்சியைச் சேர்ந்தவரையும் தேர்வு செய்து வந்தன. அந்த மரபு தற்போது மாறிப்போனது என்பதே கமல்நாத்தின் வருத்தமாக உள்ளது.
 | 

காங்கிரஸின் வெற்றியை வருத்தமுடன் தெரிவித்த கமல்நாத்!!

மத்தியப் பிரதேச சட்டப்பேரவையின் துணை சபாநாயகர் பதவிக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றியடைந்தார். ஆனால், இந்த வெற்றியை முதல்வர் கமல்நாத் வருத்தமுடன் பகிர்ந்து கொண்டார்.

கமல்நாத்தின் வருத்தத்துக்கு காரணம் இதுதான். மத்தியப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ், பா.ஜ.க. என எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சபாநாயகராக ஆளுங்கட்சியைச் சேர்ந்தவரையும், துணை சபாநாயகராக எதிர்க்கட்சியைச் சேர்ந்தவரையும் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் தேர்வு செய்து வந்தன. கடந்த 29 ஆண்டுகளாக இந்த பாரம்பரியம்தான் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.

அண்மையில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியை பிடித்த காங்கிரஸ் கட்சிக்கும், தோல்வியடைந்த பா.ஜ.க.வுக்கும் இடையே வெறும் 5 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே வித்தியாசமாக அமைந்தது. மொத்தம் 234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் காங்கிரஸுக்கு 114 எம்.எல்.ஏ.க்களும், பா.ஜ.க.வுக்கு 109 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். மீதமுள்ள இடங்களில் சுயேட்சை மற்றும் பிற கட்சிகள் வெற்றி பெற்றன.

இந்நிலையில், சபாநாயகர் பதவிக்கு பா.ஜ.க. வேட்பாளரை நிறுத்தியது. இருப்பினும், வாக்கெடுப்பில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இதையடுத்து, போட்டிக்கு போட்டியாக துணை சபாநாயகர் பதவிக்கு வேட்பாளரை நிறுத்தி காங்கிரஸ் வெற்றி பெற்றுவிட்டது. இதுகுறித்து முதல்வர் கமல்நாத் கருத்து தெரிவிக்கையில், மரபுக்கு மாறாக சபாநாயகர் பதவிக்கு பா.ஜ.க. வேட்பாளரை நிறுத்தியது. காங்கிரஸ் கட்சியில் பிளவு இருக்கும் என்று அக்கட்சி நினைத்தது. இதனால்தான், துணை சபாநாயகர் பதவிக்கு போட்டியிடுவது என நாங்கள் முடிவு செய்து அதில் வெற்றியும், அடைந்துள்ளோம். இருந்தபோதிலும் 29 ஆண்டுகளாக பின்பற்றி வந்த மரபு உடைக்கப்பட்டுள்ளது வருத்தம் தரக்கூடியி விஷயம் தான் என்று  கருத்து தெரிவித்துள்ளார்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP