ஜார்க்கண்ட் - பா.ஜ.க. கூட்டணியில் தொகுதி உடன்பாடு

ஜார்க்கண்டில் மொத்தம் 14 தொகுதிகள் உள்ளன. இதில், 13 தொகுதிகளில் பா.ஜ.க. போட்டியிடுவது என்றும், கூட்டணியில் உள்ள ஜார்க்கண்ட் மாணவர் யூனியன் ஒரு தொகுதியில் போட்டியிடுவது என்றும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
 | 

ஜார்க்கண்ட் - பா.ஜ.க. கூட்டணியில் தொகுதி உடன்பாடு

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, ஜார்க்கண்ட் மாநிலத்தில் பா.ஜ.க. கூட்டணிக் கட்சிகள் இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

சின்னஞ்சிறு மாநிலமான ஜார்க்கண்டில் மொத்தம் 14 தொகுதிகள் உள்ளன. இதில், 13 தொகுதிகளில் பா.ஜ.க. போட்டியிடுவது என்றும், கூட்டணியில் உள்ள ஜார்க்கண்ட் மாணவர் யூனியன் ஒரு தொகுதியில் போட்டியிடுவது என்றும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. பா.ஜ.க. பொதுச் செயலாளர் பூபேந்தர் யாதவ் இத்தகவலை நேற்று டெல்லியில் தெரிவித்தார்.

முன்னதாக, பா.ஜ.க. உயர்நிலைக் குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. அப்போது இந்த தொகுதி உடன்பாடு குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தலைவர் அமித் ஷா மற்றும் மூத்த தலைவர்கள் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஜார்க்கண்ட் மாநிலத்திலும் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP