கர்நாடக ஜெயநகர் தொகுதியில் இன்று இடைத்தேர்தல் !!

கர்நாடக மாநிலத்தின் ஜெயநகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கவுள்ளது.
 | 

கர்நாடக  ஜெயநகர் தொகுதியில் இன்று  இடைத்தேர்தல் !!

கர்நாடக மாநிலத்தின் ஜெயநகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கவுள்ளது.  

கர்நாடக மாநிலத்தில்  கடந்த மாதம் 12–ம் தேதி சட்டசபை தேர்தல் நடைப்பெற்றது. மொத்தம் 224 தொகுதிகள் உடைய அம்மாநிலத்தில், ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் விஜயகுமார் மரணம் அடைந்ததால் அந்த தொகுதிக்கும், ஆர்.ஆர் நகர் தொகுதிக்கும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. இதையடுத்து, ஜெயநகர் தொகுதிக்கு ஜூன் 11ம்  தேதி தேர்தல்  நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று ஜெயநகர் தொகுதிக்கு இன்று தேர்தல் நடைபெற உள்ளது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெற உள்ளது.

இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் மந்திரி ராமலிங்க ரெட்டியின் மகளான சவுமியா ரெட்டியும், பா.ஜனதா சார்பில் மறைந்த விஜயகுமார் எம்.எல்.ஏ.வின் சகோதரர் பிரகலாத் பாபுவும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். இங்கு காங்கிரஸ் கட்சிக்கு மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் தேசிய தலைவர் தேவே கவுடா அறிவித்துள்ளார்.

இன்று பதிவாகும் வாக்குகளின் எண்ணிகை வருகிற 13ம் தேதி  எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP