ஜம்மு- காஷ்மீர் தேர்தல்: வாக்குப்பதிவு விறுவிறு!

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் 8 -ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 6,304 பேர் களத்தில் உள்ளனர். 9.34 லட்சம் பேர் தங்களது பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க உள்ளனர்.
 | 

ஜம்மு- காஷ்மீர் தேர்தல்: வாக்குப்பதிவு விறுவிறு!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் 8 -ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கிராம பஞ்சாயத்துகள் மற்றும் துணை பஞ்சாயத்துகளுக்கு முறையே 681, 43 பேர்  போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த இடங்கள் போக, மீதமுள்ள 2,007 கிராம பஞ்சாயத்துக்கள், 331  துணை பஞ்சாயத்துகளுக்கு பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க மொத்தம் ஒன்பது கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகின்றன.

கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 7-ஆம் கட்ட  வாக்குப்பதிவில் மொத்தம் 75.3 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இந்த நிலையில், அங்கு  8-ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.ஒன்பதாம் கட்ட மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு  வரும் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 11) நடைபெறவுள்ளது.

இந்தத் தேர்தலில் மொத்தம் 6,304 பேர் களத்தில் உள்ளனர். மொத்தம் 9.34 லட்சம் வாக்காளர்கள் தங்களது பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க உள்ளனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP