ஜெயிச்சு 2 மாசம் ஆகியும் ஒரே அமைச்சருடன் ஆட்சி நடத்தும் முதல்வர்!

தெலுங்கானாவுடன் தேர்தல் முடிவுகள் வெளியான மற்ற 4 மாநிலங்களில் புதிய அரசுகள் அமைந்து, வழக்கமான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், தெலுங்கானாவில் ஒரேயொரு அமைச்சரை மட்டுமே நியமித்திருக்கிறார் முதல்வர் சந்திரசேகர ராவ்.
 | 

ஜெயிச்சு 2 மாசம் ஆகியும் ஒரே அமைச்சருடன் ஆட்சி நடத்தும் முதல்வர்!

தெலுங்கானா மாநிலத்தில் புதிய அரசு அமைந்து இரண்டு மாதங்களாகியும், ஒரேயொரு அமைச்சரை மட்டும் நியமித்துவிட்டு, பிற அமைச்சர்களை நியமிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார் முதல்வர் சந்திரசேகர் ராவ்.

 

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிஸோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து கடந்த ஆண்டு டிசம்பர் 11ம் தேதி தேர்தல் முடிவு வெளியானது. மற்ற 4 மாநிலங்களிலும் வெற்றி பெற்ற கட்சிகள் புதிய அரசை அமைத்து ஆட்சி செய்து வருகின்றன. தெலுங்கானாவில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி இரண்டாம் முறையாக ஆட்சியை பிடித்த நிலையில், சந்திரசேகர் ராவ், முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். இங்கு மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 88 இடங்களை அக்கட்சி கைப்பற்றியிருந்தது.

தெலுங்கானா சட்டப்பேரவையின் பலத்தை பொருத்தவரையில், முதல்வரையும் சேர்த்து 18 அமைச்சர்கள் இருக்கலாம். ஆனால், முஹம்மது மஹமூத் அலி என்பவரை மட்டும் உள்துறை அமைச்சராக நியமித்தார் சந்திரசேகர் ராவ். பிற அமைச்சர்கள் பொங்கலுக்கு பிறகு நியமிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், பொங்கலும் கடந்தது, முதல்வர் நடத்திய வெற்றி யாத்திரையும் கடந்தது, அதன் பிறகு மாபெரும் சண்டி யாகத்தையும் கூட நடத்தி முடித்தார். ஆனால், அமைச்சரவை மட்டும் விரிவாக்கம் செய்யப்படவில்லை.

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மக்கள் தங்களுக்கு பெருவாரியாக வாக்களித்திருக்கும் நிலையில், அம்மக்களை திருப்திபடுத்தும் விதமாக அமைச்சர்களை நியமிக்க வேண்டும் என்பதால் தாமதம் நிலவுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், 15 அமைச்சர்கள் தேவையென்றால் 30 பேர் போட்டிக்கு நிற்கிறார்கள் என்ற வாதமும் இருக்கிறது. அதே சமயம், ஒன்றொக்கு, ஒன்று தொடர்புடைய துறைகளை ஒருங்கிணைத்து ஒரே அமைச்சரவையாகக் கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெறுவதாலேயே இந்த தாமதம் நிலவுகிறது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP