போபாலில் ஈவிஎம் அறையில் சிசிடிவி வேலை செய்யவில்லை என்பது உண்மையே - தேர்தல் ஆணையம் ஒப்புதல்

போபாலில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைப் பகுதியில், மின்தடை காரணமாக சிசிடிவி கேமிரா வேலை செய்யாமல் போனதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. இனி இதுபோன்று நடைபெறாமல் தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
 | 

போபாலில் ஈவிஎம் அறையில் சிசிடிவி வேலை செய்யவில்லை என்பது உண்மையே - தேர்தல் ஆணையம் ஒப்புதல்

மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு வெளியே சிசிடிவி கேமிராக்கள், எதிர்பாராத மின்தடை காரணமாக வேலை செய்யவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த மாநிலத்தில் வரும் 11ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

முன்னதாக, போபால் மாநகரத்தின் சாகர் என்ற பகுதியில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு வெளியே சிசிடிவி கேமிராக்கள் வேலை செய்யவில்லை என்று தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி முறையீடு செய்திருந்தது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுப் பெறப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், வெள்ளிக்கிழமை திடீரென ஏற்பட்ட மின்தடை காரணமாக காலை 8.19 முதல் 9.35 மணி வரையில் சிசிடிவி கேமிராக்களும், அவற்றின் படங்களை காட்டும் எல்.ஈ.டி. தொலைக்காட்சியும் வேலை செய்யவில்லை என தெரியவந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இனி இதுபோன்று நடைபெறுவதைத் தடுக்கும் வகையில், இன்வெர்டர் மற்றும் ஜெனரேட்டர்களை தயார் நிலையில் வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

இதற்கிடையே,நாயிப் என்ற பகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்களை இரண்டு நாள்கள் கழித்து ஒப்படைத்த தேர்தல் அதிகாரியும், தாசில்தாரருமான ராஜேஷ் மெஹ்ராவை தேர்தல் ஆணையம் இடைநீக்கம் செய்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP