தோல்வி பயத்தில் புதிய தொகுதியை தேடுகிறாரா ராகுல் காந்தி?

2014இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் ராகுல் காந்திக்கு பலப்பரீட்சையாக அமைந்தது. அமேதியில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் ஸ்மிருதி இரானி பெரும் போட்டியாளராக அமைந்தார். இதனால், இறுதி நேர இழுபறிக்கு பிறகே ராகுல் வெற்றி பெற முடிந்தது.
 | 

தோல்வி பயத்தில் புதிய தொகுதியை தேடுகிறாரா ராகுல் காந்தி?

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இதுவரையிலும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் போட்டியிட்டு வந்த நிலையில் இந்த முறை அவர் தொகுதி மாறக் கூடும் அல்லது கூடுதலாக மற்றொரு தொகுதியில் போட்டியிடக் கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சி தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

கடந்த 2005 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்ற சமயங்களில், அமேதி தொகுதியில் இருந்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வாகை சூடினார். ஆனால், 2014இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் ராகுல் காந்திக்கு பலப்பரீட்சையாக அமைந்தது. அமேதியில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் ஸ்மிருதி இரானி பெரும் போட்டியாளராக அமைந்தார். இதனால், இறுதி நேர இழுபறிக்கு பிறகே ராகுல் காந்தி வெற்றி பெற முடிந்தது.

அமேதியில் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்றாலும், அங்கு ராகுல் காந்தி பெரிய அளவில் எதையும் செய்யவில்லை என்று பொதுமக்கள் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதே சமயம், கடந்த தேர்தலில் தோல்வியுற்றாலும் ஸ்மிருதி இரானி அங்கு அடிக்கடி சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வகுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஸ்மிருதி இரானிக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இதுகுறித்து காங்கிரஸ் தலைமை அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில்,  தோல்வியைத் தவிர்க்கும் விதமாக அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிட வேண்டாம் என்ற முடிவுக்கு ராகுல் வந்திருப்பதாகத் தெரிகிறது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் சிந்துவாரா, மகாராஷ்டிர மாநிலத்தின் நாந்தெத் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடலாம் என்றும், அல்லது அமேதியுடன் சேர்த்து இரண்டு தொகுதிகளில் அவர் போட்டியிடலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பஞ்சாப் அல்லது சண்டீகர் மாநிலத்தில் இருந்து போட்டியிடலாமா என்பது குறித்தும் அவர் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP