ராகுல் உயிருக்கு ஆபத்தா? : மத்திய அரசு திட்டவட்டமாக மறுப்பு

ராகுல் காந்திக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பில் எந்த குறைப்பாடும் இல்லை என்றும், அவரது உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
 | 

ராகுல் உயிருக்கு ஆபத்தா? : மத்திய அரசு திட்டவட்டமாக மறுப்பு

 ராகுல் காந்திக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பில் எந்த குறைப்பாடும் இல்லை என்றும், அவரது உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அமேதி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய திறந்தவெளி வாகனத்தில் நேற்று சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அவரின் தலையை குறிவைத்து, பச்சை நிறத்தில் லேசர் கதிர்கள் பாய்ச்சப்பட்டன என்றும், இதனால், தொலைத்தூரத்தில் இருந்து லேசர் குண்டுகள் மூலம் அவரை கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டதா? என்ற சந்தேகம் எழுவதாகவும் காங்கிரஸ் கட்சி தெரிவித்திருந்தது.

மேலும், சிறப்புப் பாதுகாப்பு பிரிவின்கீழ் (எஸ்பிஜி) வரும் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பில் குறைபாடு உள்ளதாகவும், இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், ராகுல் காந்தியின் பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக, எவ்வித கடிதமும் வரவில்லையென மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், ராகுலின் பாதுகாப்பில் எவ்வித குறைப்பாடும் இல்லையென்றும் அந்த அமைச்சகம் திட்டவட்டமாக கூறியுள்ளது.

அத்துடன், ராகுலின் தலைப் பகுதியில் பச்சைநிற லேசர் கதிர்கள் பாய்ச்சப்படும் காட்சிகள் அடங்கிய வீடியோ குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், " ராகுலின் தலைப் பகுதியில் பாய்ச்சப்பட்ட பச்சை நிற கதிர்கள், காங்கிரஸ் கட்சி புகைப்படக்காரரின் செல்ஃபோனில் இருந்து வந்ததென்பது தெரிய வந்துள்ளது.

அமேதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அருகே பத்திரிகையாளர்களுக்கு ராகுல் பேட்டியளித்து கொண்டிருந்தபோது, அதனை அவரது கட்சியின் புகைப்படக்காரர் தனது செல்ஃபோனில் படம்பிடித்து கொண்டிருந்தார். அப்போது அதிலிருந்து வந்த ஒளியே ராகுல் மீது விழுந்துள்ளது" என விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

 newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP