காங்கிரஸ் தலைவராகிறார் கேப்டன் அமரீந்தர் சிங்?

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததை அடுத்து, அந்த கட்சியின் புதிய தலைவராக, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
 | 

காங்கிரஸ் தலைவராகிறார் கேப்டன் அமரீந்தர் சிங்?

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததை அடுத்து, அந்த கட்சியின் புதிய தலைவராக, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மக்களவை தேர்தலில், நாடு முழுவதும், 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. குறிப்பாக பெரும்பாலான வட மாநிலங்களில், அந்த கட்சியால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. 

காங்., தலைவராக ராகுல் பொறுப்பேற்ற பின் சந்தித்த முதல் மக்களவை பொதுத் தேர்தல் என்பதால், அந்த கட்சியினர், அவர் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு வைத்திருந்தனர். 

எனினும், எதிர்பார்ப்புக்கு மாறாக அந்த கட்சி மிகப் பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. இதையடுத்து, தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆராய, காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்று வருகிறது. 

இதில், ராகுல் தன் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், காங்கிரஸ் மூத்த தலைவரும், பஞ்சாப் மாநில முதல்வருமான அமரீந்தர் சிங், கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

முன்னாள் பிரதமர் இந்திரா படுகொலையை அடுத்து நாடு முழுவதும் சீக்கியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரத்தில், காங்கிரஸ் கட்சிக்கு முக்கிய பங்கு இருப்பதாக, பா.ஜ., தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், அதற்கு கவுன்டர் கொடுக்கும் வகையில், சீக்கியரான அமரீந்தர் சிங் கட்சித் தலைவர் ஆக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP