இடைக்கால சபாநாயகர் மாற்றம் - அதிருப்தியில் ஃபட்னாவிஸ் !!

மகாராஷ்டிரா மாநிலத்தில்,இடைக்கால சபாநாயகராக முன்னர் பாஜகவை சேர்ந்த காளிதாஸ் கொலம்ப்கர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது திலீப் வால்சே படில் நியமிக்கப்பட்டுள்ளதால் அதிருப்தியில் உள்ளார் பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ்.
 | 

மகாராஷ்டிராவில் கடந்த வாரம் தேசியவாத காங்கிரஸின் அஜித் பவாருடன் இணைந்து பாரதிய ஜனதா கட்சி ஆட்சியமைத்திருந்தது. இதை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தனது பதவியே ராஜினாமா செய்தார். இதனிடையில், இடைக்கால சபாநாயகரை உடனடியாக தேர்வு செய்ய வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி, பாஜக எம்.எல்.ஏ காளிதாஸ் கொலம்ப்கர் தேர்வு செய்யப்பட்டு ஆளுநர் முன்னிலையில் பதவியேற்று கொண்டார்.

இதை தொடர்ந்து, இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், உத்தவ் தாக்கரே தலைமையிலான மஹா விகாஸ் அகாதி கூட்டணி 169 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு பதவியேற்ற காளிதாஸ் கொலம்ப்கர் மாற்றப்பட்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திலீப் வால்சே படில் இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனால் அதிருப்தியடைந்த பாரதிய ஜனதா கட்சி தலைவரும், மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதலமைச்சருமான தேவேந்திர ஃபட்னாவிஸ், இன்று நடைபெற்ற எதுவும் சட்டப்படி நடைபெறவில்லை எனவும், எம்.எல்.ஏக்களின் ஆதரவு எங்கே கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயத்தில் தான் இடைக்கால சபாநாயகர் மாற்றப்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP