வங்கதேசத்தில் இருந்து வந்த சிறுபான்மை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை - அமித் ஷா

வங்க தேசத்தில் இருந்து குடிபெயர்ந்து வந்த சிறுபான்மை மக்களான ஹிந்துக்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும் என்பதை பாஜக தெளிவாகக் கூறியுள்ளது என்றார் அமித் ஷா.
 | 

வங்கதேசத்தில் இருந்து வந்த சிறுபான்மை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை - அமித் ஷா

வங்கதேசத்தில் இருந்து அகதிகளாக குடிபெயர்ந்து வந்த சிறுபான்மை மக்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா வாக்குறுதி அளித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் அவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “வங்க தேசத்தில் இருந்து குடிபெயர்ந்து வந்த சிறுபான்மை மக்களான ஹிந்துக்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும் என்பதை பாஜக தெளிவாகக் கூறியுள்ளது.

இந்த மாநிலத்தில் சரஸ்வதி பூஜை, துர்கா பூஜை ஆகிய பண்டிகைகள் கௌரவத்துடன் கொண்டாடப்படுவதை உறுதி செய்யக் கூடிய ஒரே கட்சி பாஜகதான்’’ என்றார்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP