சாலை மோசமா இருந்தா ஒப்பந்ததாரர் மேல புல்டோசர ஏற்றுவேன் - மத்திய அமைச்சர் அதிரடி

சாலைகளின் தரம் மோசமாக இருப்பது தெரியவந்தால் புல்டோசரை விட்டு ஏற்றுவேன் என்று பல பெரிய ஒப்பந்ததார்களிடம் தயக்கமின்றி கூறியிருக்கிறேன் என்றார் மத்திய நெடுஞ்சாலை, போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி.
 | 

சாலை மோசமா இருந்தா ஒப்பந்ததாரர் மேல புல்டோசர ஏற்றுவேன் - மத்திய அமைச்சர் அதிரடி

சாலைகள் தேசத்தின் சொத்துக்கள் என்று குறிப்பிட்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, அவை மோசமாக இருப்பது தெரியவந்தால் ஒப்பந்ததாரர்கள் மீது புல்டோசரை விட்டு ஏற்றுவேன் என்று அதிரடியாகப் பேசினார். நெடுஞ்சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் என்ற வகையில் அவரது பேச்சு முக்கியத்துவம் பெறுகிறது.

மும்பையில் நேற்று நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கட்கரி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

நாடெங்கிலும் ரூ.10 லட்சம் கோடி அளவில் சாலைகள் அமைப்பதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை நாங்கள் வெளியிட்டுள்ளோம். ஆனால், அந்த ஒப்பந்தங்களைப் பெற இதுவரை எந்தவொரு ஒப்பந்ததாரரும் எனது அலுவலகத்துக்கு வரவில்லை. ஆனால், பல பெரிய ஒப்பந்ததாரர்களிடம் ஒரு விஷயத்தை நான் தயக்கமின்றி கூறியிருக்கிறேன். சாலைகளின் தரத்தில் ஏதாவது குறைபாடு தென்பட்டால் அவர்கள் மீது புல்டோசரை ஏற்றுவேன் எனக் கூறியிருக்கிறேன். சாலைகள் இந்த தேசத்தின் சொத்து. அவற்றின் தரத்தில் எந்தவித சமரசமும் கிடையாது என்றார் அவர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP