பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால், ஒவைஸி தெலங்கானவை விட்டு ஓடிவிடுவார்: யோகி ஆதித்யநாத்

தெலங்கானாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அம்மாநிலத்தில் பாரதிய ஜனதா ஆட்சியமைத்தால், ஹைதராபாத் எம்.பி அசாதுதீன் ஒவைஸி மாநிலத்தை விட்டே ஓடி விடுவார், என எச்சரித்தார்.
 | 

தெலங்கானா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதை ஒட்டி, இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன. பாரதிய ஜனதாவுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், சங்காரெட்டி பகுதியில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், பிரிவினையை உண்டாக்குபவர்களுக்கு பாரதிய ஜனதா பாதுகாப்பளிக்காது என எச்சரித்தார். 

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு காங்கிரஸ் பெரும் முட்டுக்கட்டையாக இருந்து வருவதாக யோகி பேசினார். "அயோத்தியில் மகா ராமர் கோவில் கட்ட தடையாக இருப்பது காங்கிரஸ். காங்கிரஸ் மட்டுமே. பாரதிய ஜனதா கட்சி மதம், சாதி எதுவும் பார்ப்பதில்லை. தெலங்கானாவில் ஆட்சியமைத்தால், இஸ்லாமியர்களுக்கு நிலம் ஒதுக்குவோம் என கூறுவது காங்கிரஸ் கட்சி தான். அக்கட்சியின் திட்டங்கள் எல்லாமே பிரிவினைவாதத்தை தூண்டுவன" என்றார். 

ஹைதராபாத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அகில இந்திய மஜிலிஸ் கட்சியின் தலைவர் ஒவைஸியை தாக்கி பேசிய ஆதித்யநாத், தெலங்கானாவில் பாரதிய ஜனதா ஆட்சி அமைத்தால், ஹைதராபாத்தில் இருந்து நிஜாம் ஓடியதை போலவே, தெலங்கானாவை விட்டு ஒவைஸியும் ஓடி விடுவார்" என கூறினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP