எனக்கு பிரதமர் நரேந்திர மோடி மீது அன்பு உண்டு- ராகுல் காந்தி பேச்சு

பிரதமர் நரேந்திர மோடி மீது எனக்கு வெறுப்புணர்ச்சியோ, கோபமோ ஏற்பட்டதில்லை என்று புனேவில் நடந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
 | 

எனக்கு பிரதமர் நரேந்திர மோடி மீது அன்பு உண்டு- ராகுல் காந்தி பேச்சு

பிரதமர் நரேந்திர மோடி மீது எனக்கு வெறுப்புணர்ச்சியோ, கோபமோ ஏற்பட்டதில்லை என்று புனேவில் நடந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிரா மாநிலம், புனே நகரில் கல்லூரி மாணவ-மாணவியரிடையே மாற்றத்தை உருவாக்குபவர்கள் என்ற தலைப்பில் இன்று நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார்.

அப்போது சில கேள்விகளுக்கு பதிலளித்த ராகுல் காந்தி,  நாங்கள் அனைத்து தரப்பினரிடமும் ஆலோசனை நடத்திய பின்னரே தேர்தல் அறிக்கையில் நிறைவேற்றத்தக்க வாக்குறுதிகளை அளித்திருக்கிறோம் என குறிப்பிட்டார். 

ஏழை மக்களின் வங்கிக் கணக்குகளில் ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் செலுத்துவதாக நாங்கள் வாக்குறுதி அளித்துள்ளதால் அதை ஈடுகட்ட வருமான வரி உள்ளிட்ட எவ்வித வரிகளையும் உயர்த்த மாட்டோம். இந்த திட்டத்தால் நடுத்தர மக்களின் வாழ்க்கையில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் தெரிவித்தார். 

பாகிஸ்தானுக்குள் புகுந்து பாலகோட் பகுதியில் நாம் நடத்திய தாக்குதலுக்கு இந்திய விமானப்படை மட்டுமே உரிமை கொண்டாட வேண்டும். மேலும், எனக்கு பிரதமர் நரேந்திர மோடி மீது அன்பு உண்டு. தனிப்பட்ட முறையில் அவர் மீது  மீது எனக்கு வெறுப்புணர்ச்சியோ, கோபமோ ஏற்பட்டதில்லை என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP