என்னை நானே வெல்ல வேண்டும்: பிரதமர் நரேந்திர மாேடி பேச்சு

ஆனால் தற்போது ஒன்று கூறிக் கொள்ள விரும்புகிறேன். மாேடியின் போட்டியாளன் மாேடியே. ஆம், கடந்த ஐந்து ஆண்டுகளில் பிரதமர் என்ற வகையில் நான் நிறைவேற்றிய மக்கள் நலத்திட்டங்களை விட, அடுத்த ஐந்து ஆண்டுகளில் அதிகம் செய்ய வேண்டும் என நினைக்கிறேன்.
 | 

என்னை நானே வெல்ல வேண்டும்: பிரதமர் நரேந்திர மாேடி பேச்சு

டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மாேடி பேசியதாவது: ‛‛2014ம் ஆண்டு தேர்தலுக்கு முன், சில பத்திரிக்கையாளர்கள் என்னிடம் கேள்வி எழுப்பினர். உங்களுக்கு போட்டியாளராக யாரை பார்க்கிறீர்கள் என. அப்போது நான் கூறினேன், எனக்கு அப்படி யாரும் கிடையாது என்றேன். 

ஆனால் தற்போது ஒன்று கூறிக் கொள்ள விரும்புகிறேன். மாேடியின் போட்டியாளன் மாேடியே. ஆம், கடந்த ஐந்து ஆண்டுகளில் பிரதமர் என்ற வகையில் நான் நிறைவேற்றிய மக்கள் நலத்திட்டங்களை விட, அடுத்த ஐந்து ஆண்டுகளில் அதிகம் செய்ய வேண்டும் என நினைக்கிறேன். 

மிகப் பெரிய பொறுப்பு என் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. என் கடமையை நான் சரியாக நிறைவேற்ற வேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த அரசு செய்த சாதனையை விட, புதிதாக அமையவுள்ள அரசு மேலும் பல சாதனைகளை செய்ய வேண்டும். இதுவே என் இலக்கு. அதை நோக்கியே பயணிப்பேன்’’ என அவர் பேசினார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP