உங்க மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்க வந்திருக்கேன் - ராகுல் காந்தி பேச்சு

உங்கள் மனதிலும், எண்ணங்களிலும் என்ன இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வந்திருக்கிறேன். உங்கள் சகோதரனாக, மகனாக, உங்களில் ஒருவனாக இருக்க விரும்புகிறேன் என்று வயநாடு மக்களிடம் உருக்கமாக பேசினார் ராகுல் காந்தி.
 | 

உங்க மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்க வந்திருக்கேன் - ராகுல் காந்தி பேச்சு

கேரள மாநிலத்தின் வயநாடு தொகுதியின் வேட்பாளரும், காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி இன்று அங்கு பிரசாரம் செய்தபோது, மக்கள் மனதில் என்ன இருக்கிறது? என்பதை அறிந்துகொள்ள வந்திருப்பதாகத் தெரிவித்தார்.

தற்போதைய மக்களவைத் தேர்தலில், உத்தரப் பிரதேசத்தின் அமேதி மற்றும் கேரளாவின் வயநாடு என இரு தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். 

இன்று அவர் வயநாட்டில் பிரசாரம் செய்தபோது, “என்னுடைய மனதில் என்ன இருக்கிறது என்பதை சொல்ல நான் இங்கு வரவில்லை. உங்கள் மனதிலும், எண்ணங்களிலும் என்ன இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வந்திருக்கிறேன். உங்கள் சகோதரனாக, மகனாக, உங்களில் ஒருவனாக இருக்க விரும்புகிறேன். உங்கள் வாழ்க்கை முறை, கலாசாரம் போன்றவற்றை புரிந்து கொள்ள நினைக்கிறேன். மகிழ்ச்சியாக வாழுவதற்கான ஒரு இடம் வயநாடு என்பதை ஒட்டுமொத்த உலகுக்கும் தெரிவிக்க விரும்புகிறேன்’’ என்றார்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP