காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் ஹார்திக் படேல்

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், படேல் சமூக இடஒதுக்கீடு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் ஹார்திக் படேல், வரும் 12ம் தேதி காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளார் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
 | 

காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் ஹார்திக் படேல்

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், படேல் சமூக இடஒதுக்கீடு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் ஹார்திக் படேல், வரும் 12ம் தேதி காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் கட்சி சார்பில் அவர் தேர்தலில் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவிக்கின்றனர். குஜராத் மாநிலம், ஜாம்நகர் தொகுதி அவருக்கு ஒதுக்கப்படலாம் எனத் தெரிகிறது. குஜராத் மாநில காங்கிரஸின் செயற்குழு கூட்டம், வரும் 12ம் தேதி அஹமதாபாத் நகரில் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கவுள்ளார். அப்போது, அவரது முன்னிலையில் ஹார்திக் படேல், கட்சியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP