நேர்மையான ஆட்சியா? ஊழல் ஆட்சியா? என மக்கள் தீர்மானிக்க வேண்டும்: மோடி

இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 18 வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் பல்வேறு இடங்களில் தேர்தல் பிரட்சாரம் செய்து வருகிறார்.
 | 

நேர்மையான ஆட்சியா? ஊழல் ஆட்சியா? என மக்கள் தீர்மானிக்க வேண்டும்: மோடி

இந்தியாவில் நேர்மையான ஆட்சியா? அல்லது ஊழல் ஆட்சியா? என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என மோடி பரப்புரை!!

இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 18 வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் பல்வேறு இடங்களில் தேர்தல் பிரட்சாரம் செய்து வருகிறார். 

இதன் ஒரு பகுதியாக இன்று ஒடிஷாவின் சுந்தர்கார்கில் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய மோடி, முன்பொரு காலத்தில் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத இடங்களில் எல்லாம் தற்போது பாஜக கொடி பறப்பதாக தெரிவித்தார்.

மேலும், இதுகுறித்து பிரதமர் மோடி கூறுகையில், இந்த முறை ஒடிசாவில் தாமரை மலர்ந்தே தீரும். வெற்றியை பாஜக அள்ளிப்பருகும், ஒடிசா மாநிலத்தில் இந்த முறை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தாமரை மலரும் என்று நான் பெருமையுடம் சொல்லுவேன். 

அதேப்போல் மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. பாஜக நாட்டின் வலிமையான மற்றும் தீர்க்கமான கட்சியாகும். நாட்டின் வளர்ச்சி, பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பாஜக செயல்படுகிறது.

நாட்டிற்கும், ஒடிசாவிற்கும் வரப்போகும் மக்களைவை தேர்தல் நல்ல எதிர்காலத்தை உருவாக்கப்போகிறது. தொண்டர்களின் கடுமையான உழைப்பிலும், வியர்வையிலும் உருவானது தான் இந்த பாஜக தவிர, பணத்தினாலோ அல்லது வாரிசு முறையிலோ உருவாக்கப்படவில்லை. 

தற்போதும் தொண்டர்களின் வியர்வையினால் தான் வளர்ந்து வருகிறது. எனவே தான் இன்று நாட்டில், மிகப்பெரிய ஜனநாயக கட்சியாக பாஜக விளங்குகிறது என அவர் தெரிவித்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP