திரிணாமுல் எம்.எல்.ஏ., பா.ஜ.,வில் இணைந்தார்

மேற்கு வங்கத்தை ஆளும், திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த, எம்.எல்.ஏ., அர்ஜுன் சிங், அந்த கட்சியிலிருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்தார்.
 | 

திரிணாமுல் எம்.எல்.ஏ., பா.ஜ.,வில் இணைந்தார்

மேற்கு வங்கத்தை ஆளும், திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த, எம்.எல்.ஏ., அர்ஜுன் சிங், அந்த கட்சியிலிருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்தார். 

மேற்கு வங்கத்தில், திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த, மம்தா பானர்ஜி முதல்வராக உள்ளார். இந்நிலையில், ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,வும், மம்தாவின் நம்பிக்கைக்கு உரியவருமாக இருந்த, அர்ஜுன் சிங், அந்த கட்சியிலிருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்தார். 

ஏற்கனவே, திரிணமுல் காங்கிரசை சேர்ந்த, எம்.பி., அனுபம் ஹசாரே, நேற்று முன்தினம் பா.ஜ.,வில் இணைந்தார். காங்கிரசு எம்.எல்.ஏ., துலால் சந்திரா, மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., முர்மு ஆகியோரும், பா.ஜ.,வில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு சில நாட்களே ஆன நிலையில், மேற்கு வங்கத்தில், பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் பா.ஜ.,வில் இணைவது அதிகரித்துள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP