மூன்று மாநில தேர்தல் முடிவுகளின் எதிரொலியே ஜிஎஸ்டி வரி குறைப்பு: ராகுல் காந்தி

மூன்று மாநில தேர்தல் முடிவுகளின் எதிரொலியே மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி குறைப்பு என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இதுவரை இல்லாத அளவுக்கு ஜிஎஸ்டி வரியை குறைத்துள்ளது என்றார்.
 | 

மூன்று மாநில தேர்தல் முடிவுகளின் எதிரொலியே ஜிஎஸ்டி வரி குறைப்பு: ராகு

மூன்று மாநில தேர்தல் முடிவுகளின் எதிரொலியே மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி குறைப்பு என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில சட்டசபை தேர்தல்களில் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. இந்த மூன்று மாநிலத் தேர்தல்களில் பாஜக தோல்வியை சந்தித்ததன் விளைவாகத் தான், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இதுவரை இல்லாத அளவுக்கு ஜிஎஸ்டி வரியை குறைத்துள்ளது என ராகுல் காந்தி தெரிவித்தார். 

மேலும், "அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜிஎஸ்டி குறைக்க வேண்டும் என காங்கிரஸ் பல்வேறு முறை வலியுறுத்தி வருகிறது. ஆனால், மத்திய அரசு இதுவரை அது குறித்து செவிசாய்க்காமல் இருந்தது. ஆனால் சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு நல்ல பாடத்தை கற்றுக்கொடுத்துள்ளன. 

இதன் விளைவாகவே தற்போது பொருட்களின் ஜிஎஸ்டி வரியை வரலாறு காணாத அளவுக்கு குறைத்துள்ளது. ஜிஎஸ்டி வரி மூலமாக சிறு மற்றும் குறு வணிகர்களின் வியாபாரம் முடங்கியுள்ளது. ஜிஎஸ்டி வரியை 'கப்பர் சிங்' வரியாக மாற்ற நினைத்த பிரதமர் மோடியின் எண்ணம் தற்போது பொய்யாகியுள்ளது" என்று பேசினார்.  

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP