சுஷ்மாவின் உடலுக்கு தேசியக்கொடி போர்த்தி அரசு மரியாதை!

டெல்லி பாஜக தலைமையகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, பாஜக மூத்த தலைவர்கள், மாநில முதல்வர்கள், அரசியல் பிரமுகர்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 | 

சுஷ்மாவின் உடலுக்கு தேசியக்கொடி போர்த்தி அரசு மரியாதை!

மத்திய முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் மாரடைப்பு காரணமாக நேற்று இரவு காலமானார்.

தற்போது டெல்லி பாஜக தலைமையகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, பாஜக மூத்த தலைவர்கள், மாநில முதல்வர்கள், அரசியல் பிரமுகர்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி வகித்த அவருக்கு தேசியக்கொடி போர்த்தப்பட்டு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. முன்னதாக அவரது உடல் மீது பாஜக கோடி போர்த்தப்பட்டிருந்தது. இன்னும் சற்று நேரத்தில் இறுதி ஊர்வலமானது நடைபெற இருக்கிறது. 

newstm.in

அயலுறவுத்துறையில் அளப்பரிய சாதனை படைத்த சுஷ்மா ஸ்வராஜ்!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP