ராஜஸ்தான் முதல்வர் பதவிக்கு முந்திச் செல்லும் கெலாட் - கைவிடப்படும் பைலட்

மத்தியப் பிரதேச முதல்வராக மூத்த தலைவரான கமல்நாத் தேர்வு செய்யப்பட்டதை போலவே, ராஜஸ்தானிலும் மூத்த தலைவரான அசோக் கெலாட் தேர்வு செய்யப்படலாம் எனவும், இளம் தலைவரான சச்சின் பைலட்டை காங்கிரஸ் மேலிடம் சமாதானம் செய்துள்ளதாகவும் தெரிகிறது.
 | 

ராஜஸ்தான் முதல்வர் பதவிக்கு முந்திச் செல்லும் கெலாட் - கைவிடப்படும் பைலட்

ராஜஸ்தான் மாநில முதல்வராக யாரை தேர்வு செய்வது என்பதில் காங்கிரஸ் கட்சிக்குள் கடும் குழப்பம் நிலவிய சூழலில், மூத்த  தலைவர் அசோக் கெலாட்டின் பெயரை இறுதி செய்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இளம் தலைவரான சச்சின் பைலட்டை காங்கிரஸ் மேலிடம் சமாதானப்படுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்றது.இதையடுத்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அடங்கிய குழுவினர் மாநில ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர். இருப்பினும் முதல்வர் யார் என்பது முடிவு செய்யப்படவில்லை. கட்சியில் மூத்த தலைவராக உள்ள அசோக் கெலாட் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவியது. 

இந்நிலையில், அவர்கள் இருவரையும் நேற்று டெல்லிக்கு அழைத்து காங்கிரஸ் மேலிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மூத்த தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் முன்னிலையில் இரண்டு சுற்றுகளாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில், இழுபறியே நீடித்தது. இந்நிலையில், ராஜஸ்தான் திரும்புவதற்காக விமான நிலையத்துக்கு சென்ற அசோக் கெலாட்டை கடைசி நிமிடத்தில் காங்கிரஸ் மேலிடம் திருப்பி வரவழைத்தது.

மற்றொருபுறம் டெல்லியிலும், ராஜஸ்தானிலும் சச்சின் பைலட்டின் ஆதரவாளர்கள் போராட்டத்தை தொடங்கினர். இந்நிலையில், காங்கிரஸ் நலனை கருத்தில் கொண்டு, கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட வேண்டும் என்றும், யாரும் போராட்டங்களை நடத்தக் கூடாது என்றும் சச்சின் பைலட் கேட்டுக் கொண்டார். அவரது இந்தக் கருத்து என்பது, காங்கிரஸ் மேலிடம் மேற்கொண்ட சமாதான முயற்சிகளின் எதிரொலியாக வெளிவந்த வார்த்தைகளாகவே கருதப்படுகிறது.

மத்தியப் பிரதேச முதல்வர் பதவிக்கு, இளம் தலைவரான ஜோதிராதித்ய சிந்தியாவை நிராகரித்துவிட்டு, மூத்த தலைவரான கமல்நாத்துக்கு வாய்ப்பளிக்கப்பட்டதைப் போல, ராஜஸ்தான் மாநிலத்திலும் மூத்த தலைவரான அசோக் கெலாட்டுக்கே வாய்ப்பளிக்கப்படும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP