தனது நிழலைப் பார்த்தே பயப்படுகிறார் : மம்தாவை விளாசிய மோடி!

மேற்கு வங்க மாநிலத்தில் பாஜகவுக்கு பெருகிவரும் ஆதரவை கண்டு விரக்தியடைந்துள்ள மம்தா பானர்ஜி, தற்போது தன் நிழலைப் பார்த்தே பயப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்று பிரதமர் மோடி சாடியுள்ளார்.
 | 

தனது நிழலைப் பார்த்தே பயப்படுகிறார் : மம்தாவை விளாசிய மோடி!

மேற்கு வங்க மாநிலத்தில் பாஜகவுக்கு பெருகிவரும் ஆதரவை கண்டு விரக்தியடைந்துள்ள மம்தா பானர்ஜி, தற்போது தன் நிழலைப் பார்த்தே பயப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்று பிரதமர் மோடி சாடியுள்ளார்.

பாஜக தேசியத் தலைவர்  அமித் ஷா தலைமையில், மேற்கு வங்க மாநிலத் தலைநகர், கொல்கத்தாவில் நேற்று பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இதில் பாஜக தொண்டர்களுக்கும், கொல்கத்தா பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, வன்முறையாக வெடித்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக, பாஜகவும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் பரஸ்பரம் ஒன்றொன்று குற்றச்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், மேற்கு வங்க மாநிலம், பஷீர்ஹட்டில், பிரதமர் நரேந்திர மோடி இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியது:

பாஜகவை பழித் தீர்ப்பேன் என்று, மேற்கு வங்க மாநில முதல்வர்  மம்தா பானர்ஜி இரண்டு நாள்களுக்கு முன்பு பகிரங்கமாக அறிவித்திருந்தார். சபதமிட்ட 24 நேரத்திலேயே, தான் சொன்னதை அவர் நிறைவேற்றியுள்ளார். கொல்கத்தாவில் அமித் ஷா நேற்று பங்கேற்ற பேரணியில், வன்முறையை கட்டவிழ்த்துவிட்டதன் மூலம், தமது நோக்கத்தை மம்தா நிறைவேற்றிவிட்டார்.

தேர்தல் கருத்துக் கணிப்புகள் அனைத்தும் பாஜக தான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கின்றன. இதனால், விரக்தியின் உச்சத்துக்கே சென்றுள்ள மம்தா, தற்போது தன் நிழலைப் பார்த்தே பயப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

யார் என்ன நினைத்தாலும், எதைச் செய்தாலும் இந்தத் தேர்தலில் பாஜகவின் வெற்றியை தடுத்துவிட முடியாது. நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக 300 இடங்களுக்கு மேல் வெற்றிப் பெறும். இந்த மாபெரும் வெற்றியில், மேற்குவங்க மாநிலம் முக்கியப் பங்கு வகிக்கும் என்று மோடி தெரிவித்தார்.

newstm.in


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP