இ.வி.எம்., முறைகேடு என்பது காங்., நடத்திய நாடகம்: ரவிசங்கர் பிரசாத்

ஓட்டுப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு, காங்., கட்சியால் நடத்தப்பட்ட நாடகம் எ,ன மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
 | 

இ.வி.எம்., முறைகேடு என்பது காங்., நடத்திய நாடகம்: ரவிசங்கர் பிரசாத்

இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஓட்டுப் பதிவு இயந்திரங்களில், முறைகேடு செய்ய முடியும் எனக்கூறிய, வெளிநாட்டை சேர்ந்த, ‛சைபர் எக்ஸ்பர்ட்’ ஒருவர், இது குறித்து, லண்டனில் நேற்று செயல்முறை விளக்கம் அளித்தார்.

இது குறித்து, கருத்து தெரிவித்துள்ள, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ‛‛ஓட்டுப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு, இந்திய ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கும் உச்சபட்ச கூத்து. 

இது, காங்., கட்சியால் நடத்தப்பட்ட நாடகம். இதன் மூலம், 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை கேள்விக் குறியாக்க முயற்சித்துள்ளனர். இந்த இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து, தேர்தல் கமிஷன் ஏற்கனவே பல முறை விளக்கம் அளித்துவிட்டது. 

இன்னமும், காங்கிரசார் ஏன் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர் என தெரியவில்லை,’’ என்றார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP