கங்காரு நீதிமன்றத்தில் கூட விசாரணை நடக்கும்: ப.சிதம்பரம் பாய்ச்சல்

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கில் இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் 'திருமதி காந்தி' என்ற பெயரை குறிப்பிட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது, கங்காரு நீதிமன்றங்களை விட மோசமான செயல் என ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
 | 

அகஸ்டா வெஸ்லேண்ட் வழக்கின் விசாரணையில், 'திருமதி காந்தி' என்ற பெயரை இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் தெரிவித்ததாக அமலாக்கத் துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் கூறினர். அவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் பெயரை குறிப்பிடுவதாக, காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பாரதிய ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.

இது நாடு முழுவதும் பெரும் விவாதப்பொருளாகியுள்ள நிலையில், ஆதாரமில்லாமல் அமலாக்கத்துறை இப்படி ஒரு செயலில் ஈடுபட்டு, நீதிமன்ற விசாரணையை கேலிக்கூத்தாக்கி உள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில், "கங்காரூ நீதிமன்றங்களில் கூட வழக்கின் விசாரணை நடக்கும். ஆனால் நமது புதிய சிஸ்டத்தில், கங்காரு நீதிமன்றங்களை மிஞ்சி, தொலைக்காட்சி சேனல்களில் நீதி வழங்கி வருகிறோம்" என்றார்.

மேலும், "இங்கு கிரிமினல் விசாரணை சட்டமும், சாட்சிய சட்டமும் வேலை செய்யாது. அமலாக்கத்துறை சொல்வது வாய்வழி ஆதாரமாகவும்; சமர்ப்பிக்கும் எந்த ஒரு ஆவணமும் ஆதாரமாகவும்; தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் தீர்ப்பாகவும் மாறிவிடும்" என்று எழுதினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP