தேசத்தை பிளந்த தேர்தல் முடிவு !

அரசியல் கட்சிகளை விட நாடு முக்கியம் என்ற எண்ணம் முதலில் நம் தலைவர்களுக்கு வர வேண்டும். அது இறைவன் கையில் தான் உள்ளது. இந்த நாடு இறைவன்களின் பூமி கட்டாயம் நாட்டிற்கு அவர் நல்லது செய்வார் என்று நம்புவோம்.
 | 

தேசத்தை பிளந்த தேர்தல் முடிவு !

இந்தியா ஒன்றாக இருப்பதற்கு காரணம் இந்தி, இந்து மதம், காங்கிரஸ் ஆகியவவை தான் காரணம்.அதற்கு ஏற்ப ஒவ்வொரு முறையும் காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வந்த போது எல்லா மாநிலத்திலும் காங்கிரஸ், அல்லது அதன் கூட்டணிக் கட்சிகளின் பிரதிநித்துவம் இருக்கும். அப்படிப்பட்ட காங்கிரஸ் வடமாநிலங்களில் அதிவேகமாக வீழ்ச்சியடைந்துவிட்டது. அதே. நேரத்தில் காங்கிரஸ் கட்சி விட்டுவிடும் இடத்தை எல்லாம் பிடிக்கும் அளவிற்கு பாஜ ஈடுகொடுக்கமுடியவில்லை. இதனால் நாடு முழுவதும் வினோதமான அதே நேரத்தில் அபாயகரமான தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன.

10 வடமாநிலங்களில் உள்ள 83 இடங்களை மொத்தமாக பாஜ கைப்பற்றியது. இந்த மாநிலங்களில் காங்கிரஸ் மட்டும் அல்லாமல், உள்ளூர் கட்சிகள் கூட பாஜகவை நெருங்க முடியவில்லை. இதில் டையு டாமன், சண்டிகர், திரிபுரா, அருணாசலபிரதேசம், போன்ற மாநிலங்கள் ஒன்று அல்லது 2 இடங்கள் தான் என்று விட்டுவிட்டாலும் குஜராத், ராஜஸ்தான், அரியானா டெல்லி போன்ற மாநிலங்களில் பாஜகவி்ன செல்வாக்கு அண்ணாந்து பார்க்கத்தான் வைக்கிறது.

இத்தனை வலிமை மிக்க கட்சி தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழகம், ஆந்திரா, கேரளாவில் ஒரு சீட்டு கூட பிடிக்கவில்லை. இதன் மூலம் தேசம் வடக்கு தெற்கு என்று பிரிந்துவிட்டதையே காட்டுகிறது. இது பாஜவின் வெற்றி மட்டும் அல்லாமல் காங்கிரஸ் கட்சியின் வெற்றியும் உறுதி செய்கிறது.

காங்கிரஸ் தமிழகத்தில் 9, கேரளாவில் 20 இடங்களில் 15 என்று மொத்தம் உள்ள 52 இடங்களில் 24இடங்களை பிடித்தாலும்,வடமாநிலங்களில் அதிகபட்சமாக வெற்றி பெற முடிவில்லை. 

திமுக போன்ற கட்சிகள் இவ்விரு கட்சிகளுக்கும் அடுத்த அடுத்த இடங்களை பிடித்து வெற்றி பெற்றால் கூட தேசம் முழுமைக்கும் பெரிய பலன கிடைக்காது. நிலையான ஆளும் கட்சி, வலுவான எதிர்கட்சி தான் ஒரு நாட்டை நல்ல முறையில் வழிநடத்த முடியம். ஆனால் இந்த தேர்தல் அபரிதமான வலிமை கொண்ட ஆளும் கட்சி, கண்ணுக் கெட்டிய துாரம் வரை எதிர்கட்சியே இல்லை என்று காட்டி இருக்கிறது. அடுத்த ஆண்டு வரை ராஜ்யசபாவில் பாஜகவிற்குபோதிய பலம் இருக்காது. அதன் காரணமாக நாட்டை பாதிக்கும் முடிவை எடுக்காது என்று நம்பலாம், ஆனால் ராஜ்சபா லோக்சபாவில் மெஜாரட்டி கிடைக்கும் போது தான் .

தென்மாநிலங்கள் எந்த அளவிற்கு பாதிப்பு ஏற்படும் என்று தெரியும். அப்படி ஏதும் நடந்தால்,சீமான், கமல், வாட்டாள் நாகராஜன் போன்றவர்கள் தான் பலன் பெறுவாரகளே தவிர்த்து நாடு எந்த பிரச்னைக்கும் தீர்வு பெறப் போவதில்லை.

இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டிய கடமை காங்கிரஸ், பாஜக கட்சிகளுக்கு மட்டுமே உள்ளது. காங்கிரஸ் தன் வரட்டு பிடிவாதத்தை விட்டு வடமாநிலங்களில் கூட்டணி அமைத்து தன் இருப்பை   தக்க வைக்கும் வேலையை செய்ய வேண்டும். டெல்லி, பீகார் போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் விரட்டப்பட்டற்கு கூட்டணி அமைப்பதில் அந்த கட்சி காட்டிய பிடிவாதமே காரணம். பாஜக கூட தற்போது அமைக்க உள்ள அமைச்சரவையில் தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் பிரதிநித்துவம் தர வேண்டும். அவ்வாறு அமைச்சராக மாறுபவர்கள் இம்மாநிலத்திற்கு தேவையான வற்றை செய்ய முன் வரவேண்டும்.

அவர்கள் நடவடிக்கைதான் பாஜகவிற்கு ஓட்டுப் போடவில்லையே என்று வருந்த வைக்கும் நிலையை உருவாக்க வேண்டும் அரசியல் கட்சிகளை விட நாடு முக்கியம் என்ற எண்ணம் முதலில் நம் தலைவர்களுக்கு வர வேண்டும். அது இறைவன் கையில் தான் உள்ளது. இந்த நாடு இறைவன்களின் பூமி கட்டாயம் நாட்டிற்கு அவர் நல்லது செய்வார் என்று நம்புவோம்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP