Newstm -இன் கருத்துக்கணிப்பை முழுவதும் பிரதிபலித்த தேர்தல் முடிவுகள்!

இணையதள செய்தி நிறுவனங்களில் முதல்முறையாக, தேசிய அளவில் வேறெந்த நிறுவனங்களும் மேற்கொள்ளாத சோதனை முயற்சியாக தேர்தலுக்கு பிந்தைய பிரத்யேக கருத்துக்கணிப்பை newstm, கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 19) வெளியிட்டது.
 | 

Newstm -இன் கருத்துக்கணிப்பை முழுவதும் பிரதிபலித்த தேர்தல் முடிவுகள்!

இணையதள செய்தி நிறுவனங்களில் முதல்முறையாக, தேசிய அளவில் வேறெந்த நிறுவனங்களும் மேற்கொள்ளாத புதிய முயற்சியாக, தேர்தலுக்கு பிந்தைய பிரத்யேக கருத்துக்கணிப்பை newstm, கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 19) வெளியிட்டது.

தேசிய, பிராந்திய மற்றும் மாநிலவாரியாக அளிக்கப்பட்ட இக்கருத்துக்கணிப்புகளை பிரதிபலிக்கும் வகையிலேயே மக்களவைத் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. இதில், தேசிய அளவில் பாஜக 280 இடங்களிலும், இதன் கூட்டணிக் கட்சிகள் 59 இடங்கள் என, தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) 339 இடங்களை கைப்பற்றும் என நியூஸ்டிஎம் கணித்திருந்தது.

தேர்தல்  முடிவுகளும் எங்களது கருத்துக்கணிப்பை பிரதிபலிப்பதாகவே அமைந்துள்ளன. அதாவது, பாஜக 303 இடங்களிலும் அதன் கூட்டணிக் கட்சிகள் 50 இடங்கள் என தேசிய ஜனநாயகக் கூட்டணி 353 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

Newstm -இன் கருத்துக்கணிப்பை முழுவதும் பிரதிபலித்த தேர்தல் முடிவுகள்!

Newstm -இன் கருத்துக்கணிப்பை முழுவதும் பிரதிபலித்த தேர்தல் முடிவுகள்!

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மொத்தம் 95 இடங்களில் மட்டுமே வெல்லும். இதில், காங்கிரஸ் 57 தொகுதிகளில் தான் வெற்றி பெறும் என்பது நியூஸ்டிஎம் -இன் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பாக இருந்தது. 

அதன்படியே, தேசிய அளவில் காங்கிரஸ் 52 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சிகள் 39 தொகுதிகளிலும் என ஐக்கிய முற்போக்கு கூட்டணி 91 இடங்களிலேயே வெற்றி பெற்றதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

இதேபோன்று, பாஜக, காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெறாத திரிணாமூல் காங்கிரஸ், தெலுகு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி உள்ளிட்ட மாநிலக் கட்சிகள் மொத்தம் 107 இடங்களில் வெற்றி பெறும் என நியூஸ்டிஎம் கணித்திருந்தது. தேர்தல் முடிவுகளின்படி மாநிலக் கட்சிகள் 98 தொகுதிகளை கைப்பற்றியுள்ளன.

மொத்தத்தில், தேர்தல் குறித்த தேசிய அளவிலான  நியூஸ்டிஎம் -இன் கருத்துக்கணிப்புகளை பிரதிபலிப்பதாகவே மக்களவைத் தேர்தல் முடிவுகள்  முழுவதும் அமைந்துள்ளன என்பதை வாசகர்களுக்கு தெரிவிப்பதில் பெருமைக் கொள்கிறோம்.

திரு. சுந்தரம்.நாகராஜன், (Psephologist)
"NMUSSK" Media And Data Analytics.

இன்ஃபோகிராஃபிக்ஸ் உதவி : எஸ்.சந்திரசேகர் (Data Analyst)

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP