தேர்தல் ஆணையம், வருமானவரித்துறை என்னையும் என் குடும்பத்தையும் தொந்தரவு செய்கின்றன: குமாரசாமி

தேர்தல் ஆணையம் மற்றும் வருமான வரித்துறை ஆகிய இரண்டும் வேண்டுமென்றே தன்னையும் தனது குடும்பத்தையும் தொந்தரவு செய்வதாக கர்நாடகா முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
 | 

கர்நாடக முதல்வர் குமாரசாமி இரு தினங்களுக்கு முன் தேர்தல் வேலைகளுக்காக ஹாசன் தொகுதிக்கு செல்லும் போது அவரின் வாகன அணிவகுப்பு தேர்தலை ஆணையத்தின் சோதனை படையினரால் தடுத்து நிறுத்தி சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, தேர்தல் ஆணையம் மற்றும் வருமான வரித்துறை ஆகிய இரண்டும் வேண்டுமென்றே தன்னையும் தனது குடும்பத்தையும் தொந்தரவு செய்வதாக குற்றம் சாட்டினார்.

மேலும், தேர்தல் ஆணைய அதிகாரிகள் தங்கள் கடமைகளை நிறைவேற்ற நான் அனுமதியளிக்கிறேன், ஆனால், சந்தேகத்தின் பேரில் எங்களை தொந்தரவு செய்ய வேண்டாம், என்று முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP