தாய்நாட்டை மறந்துவிடாதீர்கள்: மால்டாவாழ் இந்தியர்களுக்கு வெங்கையா நாயுடு வேண்டுகோள்

“மால்டாவில் வாழும் நீங்கள் உங்களை வளர்த்த தாய்நாட்டை மறந்துவிடாதீர்கள்” என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 | 

தாய்நாட்டை மறந்துவிடாதீர்கள்: மால்டாவாழ் இந்தியர்களுக்கு வெங்கையா நாயுட

“மால்டாவில் வாழும் நீங்கள் உங்களை வளர்த்த தாய்நாட்டை மறந்துவிடாதீர்கள்” என்று குடியரசுத் துணைத் தலைவர்  வெங்கையா நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தெற்கு ஐரோப்பிய நாடான மால்டாவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள அவர் தலைநகர் வல்லெட்டாவில் நேற்று இரவு இந்தியர்களிடையே உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் இந்தியாவுக்குப் பெருமை தேடித் தருகிறார்கள். அந்த நாட்டுக்கும் தாய்நாட்டுக்கும் அவர்கள் மிகவும் பங்களிப்பு செலுத்தி வருகின்றனர் என்றார்.

இந்தியாவுக்கும் மால்டாவுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தவதன் அவசியத்தை வலியுறுத்திய திரு. எம். வெங்கையா நாயுடு, சிறிய நாடான மால்டா நல்ல வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இரு நாடுகளும் நீண்ட கால உறவை மேற்கொண்டு வருகின்றன.

“நாட்டின் பரப்பு முக்கியமில்லை. அதன் வளர்ச்சிதான் முக்கியம். நிலவியல் எல்லைகள் இரு நாடுகளைப் பிரிக்கவில்லை” என்று குறிப்பிட்டார். இந்தியாவின் வளர்ச்சி வேகத்தைச் சுட்டிக் காட்டிய குடியரசுத் துணைத் தலைவர், நிலையான வளர்ச்சியை இந்தியா அடைந்து வருகிறது என்றும் அரசின் திட்டமிட்ட சீர்திருத்தங்கள் இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்தி வருகிறது என்றும் கூறினார்.

சாலை, தொலைத் தொடர்பு இந்தியாவை மாற்றிவிட்டது. தகவல் தொடர்பு மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்திவிட்டது என்று கூறிய அவர், இந்த முன்னேற்றத்துக்கு அப்போதைய பிரதமர் திரு. அடல் பிகாரி வாஜ்பாய் மேற்கொண்ட நடவடிக்கைகளை நினைவுகூர்ந்தார்.

“இந்தியா 80 கோடி இளைஞர்களைக் கொண்ட இளம் நாடு. இந்த மக்கள்தொகை பலம் மக்கள்தொகையால் கிடைக்கும் ஆதாயமாக மாற்றப்பட்டு வருகிறது” என்றும் குடியரசுத் துணைத் தலைவர் கூறினார்.

“நீங்கள் மால்டாவில் இந்தியாவின் பிரதிநிதியாகவும் இந்தியாவில் மால்டாவின் பிரதிநிதியாகவும் இருக்கிறீர்கள். இரு நாடுகளையும் இணைப்பதிலும் வளர்ச்சி காண்பதிலும் உங்களது பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது” என்றும் குடியரசுத் துணைத் தலைவர்  வெங்கையா நாயுடு கூறினார்.

இந்நிகழ்ச்சியில் இந்திய நிதித்துறை இணையமைச்சர் திரு சிவப் பிரதாப் சுக்லா, மால்டாவுக்கான இந்திய தூதர் திரு ராஜேஷ் வைஷ்ணவ் மற்றும் பிரமுகர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP