பிரதமர் மோடியின் தந்தை யார் என்று தெரியுமா? - காங்கிரஸ் தலைவரின் ஏளனக் கேள்வி

'ராகுல் காந்தியின் குடும்ப பின்னணி குறித்து அனைவருக்கும் தெரியும், ஆனால் பிரதமர் மோடியின் தந்தை யார் என்று இதுவரைக்கும் யாருக்கும் தெரியாது' என காங்கிரஸ் மூத்த தலைவர் விலாஸ்ராவ் முட்டேம்வர் தெரிவித்துள்ளது அரசியல் சூழலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 | 

பிரதமர் மோடியின் தந்தை யார் என்று தெரியுமா? - காங்கிரஸ் தலைவரின் ஏளனக் கேள்வி

'ராகுல் காந்தி குடும்பத்தின் 5 தலைமுறை குறித்து அனைவருக்கும் தெரியும், ஆனால் பிரதமர் மோடியின் தந்தை யார் என்று இதுவரைக்கும் யாருக்கும் தெரியாது' என காங்கிரஸ் மூத்த தலைவர் விலாஸ்ராவ் முட்டேம்வர் தெரிவித்துள்ளது அரசியல் சூழலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான விலாஸ்ராவ் முட்டேம்வர் காங்கிரஸ் கூட்டம் ஒன்றில் பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  

அதில் அவர் பேசுகையில், "பிரதமர் மோடி, ராகுல் காந்திக்கு கேள்விகளை முன்வைக்கிறார். யார் அவர்? 'ராகுல் காந்தியின் குடும்ப பின்னணி குறித்து அனைவருக்கும் தெரியும், ராகுல் காந்தியின் அப்பா ராஜிவ் காந்தி, ராஜிவ் தாயார் இந்திரா காந்தி. இந்திரா காந்தியின் தந்தை ஜவஹர்லால்நேரு. ஆனால், பிரதமர் மோடியின் தந்தை யாரென்று இப்போது கூட யாருக்கும் தெரியாது.. ராகுல் காந்தி குடும்பத்தின் 5 தலைமுறைகள் பற்றி தெரிந்திருக்கும் மக்களுக்கு மோடியின் முந்தைய தலைமுறை குறித்து கூட தெரியவில்லை. ஏன்? பிரதமராவதற்கு முன்பாக, மோடியை எத்தனை பேருக்கு தெரியும்? இதில் இருந்து யார் எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்' என்று பேசியுள்ளார். 

காங்கிரஸ் மூத்த தலைவர் இவ்வாறு பேசியுள்ளது அரசியல் சூழலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP