தேர்தல் முடிவதற்கு முன்பே தோல்வியை ஒப்புக்கொண்டதா காங்கிரஸ் கட்சி?

‛‛மக்களவை தேர்தல் முடிவுகளுக்குப் பின், காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் பதவி கிடைக்காமல் போனாலும் நாங்கள் கவலைப்படமாட்டோம். பா.ஜ., தலைமையில் மத்தியில் மீண்டும் ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்பதே எங்கள் நோக்கம்’’ என, காங்., மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
 | 

இது குறித்து, காங்., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, குலாம் நபி  ஆசாத், செய்தியாளர்களிடம் பேசியதாவது: ‛‛காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை கூற முடியுமா என கேள்வி எழுப்புகின்றனர். எங்களுக்கு பிரதமர் பதவி முக்கியமல்ல. தேர்தல் முடிவுகளுக்குப் பின், காங்கிரஸ் கட்சியால், பிரதமர் பதவியை பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டாலும் நாங்கள் கவலைப்படமாட்டோம். பா.ஜ., தலைமையிலான ஆட்சி மீண்டும் அமைந்துவிடக் கூடாது என்பதே எங்கள் நோக்கம். எனவே, எதிர்க்கட்சிகள் தலைமையில் ஆட்சி அமைவதில், எங்களால் எந்த பிரச்னையும் ஏற்படாது’’ என அவர் பேசினார். 

குலாம் நபி ஆசாத்தின் இந்த கருத்தின் மூலம், மக்களவை தேர்தலின் கடைசி கட்ட வாக்குப்பதிவு முடிவதற்கு முன்னரே, காங்கிரஸ் கட்சி அதன் தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டதாக, பா.ஜ., தலைவர்கள் கிண்டல் அடித்துள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP