மக்களவையில் அணை பாதுகாப்பு மசோதா தாக்கல்!

இன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அணை பாதுகாப்பு மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள அணைகளை பாதுகாக்கவும், பராமரிக்கவும் மத்திய அரசு 2016ல் 'அணை பாதுகாப்பு மசோதா'விற்கான அம்சங்களை பட்டியலிட்டது.
 | 

மக்களவையில் அணை பாதுகாப்பு மசோதா தாக்கல்!

இன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அணை பாதுகாப்பு மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

நாட்டில் உள்ள அணைகளை பாதுகாக்கவும், பராமரிக்கவும் மத்திய அரசு 2016ல் 'அணை பாதுகாப்பு மசோதா'விற்கான  அம்சங்களை  பட்டியலிட்டது.  இதன்படி, மாநிலங்களில் உள்ள அணைகளை அந்தந்த மாநில அரசே ஒரு குழு அமைத்து அவற்றை பராமரித்துக்கொள்வதற்கு  இந்த சட்டம் வழிவகை செய்கிறது.

ஆனால் இந்த மசோதாவில் தமிழக நலனுக்கு எதிராக சில அம்சங்கள் உள்ளன, எனவே அவற்றை நீக்க வேண்டும்' என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். இருந்தும், கடந்த 2017 ஜூன் 13ல் இந்த மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததுள்ளது. ஆனால் தமிழக அரசின் கோரிக்கைப்படி எந்தவித திருத்தமும் செய்யப்படவில்லை. இதையடுத்து, அணை பாதுகாப்பு மசோதாவை மறுபரிசீலனை செய்து அமல்படுத்த வேண்டும் என கடந்த ஜூன் 16ல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு கடிதம் எழுதினார். தமிழக சட்டப்பேரவையிலும் இதுகுறித்த தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இந்நிலையில், நேற்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், இன்று அணை பாதுகாப்பு மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP