தலைமை நீதிபதிக்கு எதிராக சதி - ஆதாரம் கேட்கிறது உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை ராஜிநாமா செய்ய வைக்கும் நோக்கில் சதி நடைபெறுவதாகக் கூறி பல்வேறு குற்றச்சாட்டுகளை உத்சவ் பெய்ன்ஸ் தெரிவித்திருந்தார். அவரது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
 | 

தலைமை நீதிபதிக்கு எதிராக சதி - ஆதாரம் கேட்கிறது உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எதிராக சதி வேலை நடைபெறுவதாக இளம் வழக்கறிஞர் உத்சவ் பெய்ன்ஸ் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பாக ஆதாரம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. 

உச்சநீதிமன்றத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட 35 வயது பெண் ஊழியர் ஒருவர், தலைமை நீதிபதி தம்மிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்துகொண்டதாக அதிரடியான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். அந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கும் வகையில் பதில் அளித்த ரஞ்சன் கோகோய், இதற்கு பின்னால் மாபெரும் சதி இருக்கிறது என்றும், இது நீதித்துறையின் சுதந்திரத்தைக் கெடுக்கும் முயற்சி என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எதிராக சதி நடைபெறுவதாக இளம் வழக்கறிஞர் உத்சவ் பெய்ன்ஸ், பிரமாணப் பத்திரம் ஒன்றை வெளியிட்டார். நீதிபதிக்கு எதிராக குற்றச்சாட்டு தெரிவித்துள்ள பெண்ணுக்கு ஆதரவாக வழக்காடுவதற்கு தம்மிடம் ரூ.1.5 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டதாக அவர் கூறியிருந்தார். தலைமை நீதிபதியை ராஜிநாமா செய்ய வைக்கும் நோக்கில் இத்தகைய சதி நடைபெறுவதாக உத்சவ் பெய்ன்ஸ் தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. ந்நீதிபதிகள் அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் விசாரணை நடைபெற்றது. அப்போது, உத்சவ் பெய்ன்ஸ் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆதாரங்களை சமர்ப்பிக்க வலியுறுத்தி நோட்டீஸ் அனுப்புமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP