காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் ஆளுங்கட்சியில் ஐக்கியம்!

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் 12 பேர், அந்த கட்சியிலிருந்து விலகி, ஆளும் டி.ஆர்.எஸ்.,கட்சியில் இணைவதாக அறிவித்துள்ளனர். தங்களை, டி.ஆர்.எஸ்., - எம்.எல்.ஏ.,க்களாக கருதும் படி, அவர்கள் சபாநாயகரிடம் மனு அளித்துள்ளனர்.
 | 

தெலுங்கானாவில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தில் மாெத்தமுள்ள, 119 எம்.எல்.ஏ.,க்களில், 91 பேர் டி.ஆர்.எஸ்., கட்சியை சேர்ந்தவர்கள், 7 பேர், அதன் கூட்டணி கட்சியினர். 

காங்கிரஸ் கட்சிக்கு, 19 எம்.எல்.ஏ.,க்களும், டி.டி.பி., மற்றும் பா.ஜ.,வுக்கு தலா ஓர் எம்.எல்.ஏ.,வும், நியமன உறுப்பினர் ஒருவரும் உள்ளனர். 

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, 12 எம்.எல்.ஏ.,க்கள் அந்த கட்சியிலிருந்து விலகி, டி.ஆர்.எஸ்., கட்சியில் இணைய முடிவு செய்துள்ளனர். இது குறித்த தங்கள் முடிவை ஏற்கும் படி, சபாநாயகரை சந்தித்து மனு அளித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள காங்., மேலிடம், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, மீதமுள்ள காங்., எம்.எல்.ஏ.,க்களுடன்  ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP