காங்கிரஸ் எம்எல்ஏ சித்து 3 நாட்களுக்கு பிரச்சாரம் செய்யத் தடை: தேர்தல் ஆணையம் உத்தரவு

இரு மதங்களுக்கு இடையே மோதலை உருவாக்கும் விதத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதாகக் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத்சிங் சித்துவிற்கு, பிரசாரம் செய்வதற்கு 72 மணிநேரம் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
 | 

காங்கிரஸ் எம்எல்ஏ சித்து 3 நாட்களுக்கு பிரச்சாரம் செய்யத் தடை: தேர்தல் ஆணையம் உத்தரவு

இரு மதங்களுக்கு இடையே மோதலை உருவாக்கும் விதத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதாகக் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத்சிங் சித்து  72 மணிநேரத்துக்குப் பிரசாரம் செய்வதற்குத் தடை விதித்து தேர்தல் ஆணையம்  உத்தரவிட்டுள்ளது. 

பீஹாரின் கத்தியார் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏவும், பஞ்சாப் மாநில அமைச்சருமான நவ்ஜோத்சிங் சித்து தேர்தல் பிரசாரத்தில் கடந்த 16-ம் தேதி ஈடுபட்டார். பல்ராம்பூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பர்சோய் நகரில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் சித்து பேசினார்.

அப்போது அவர், பாஜக உங்களை மதரீதியாகப் பிளபுபடுத்த முயற்சிக்கிறது. இங்கு நீங்கள் 64 சதவீதம் பேர் இருக்கிறீர்கள். நீங்கள் சிறுபான்மையினர் இல்லை. பெரும்பான்மையாக இருக்கிறீர்கள். நீங்கள் ஒற்றுமையாக சேர்ந்து வாக்களித்தால் பாஜகவையும், மோடியையும் விரட்ட முடியும். ஆதலால் பாஜகவுக்கு வாக்களிக்காதீர்கள் என்று சர்ச்சைக்குரிய வகையில் இஸ்லாத்தை முன்வைத்து மதிரீதியாக பிரசாரம் மேற்கொண்டார்.

இதையடுத்து, கத்தியார் மாவட்ட தேர்தல் அதிகாரியின் உத்தரவின் பெயரில் பர்சோய் நகர போலீஸார் சித்து மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், மாவட்ட பாஜக சார்பிலும் சித்து மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புகாரை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம் நேற்று இரவு சித்து பிரச்சாரம் செய்யத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவில், சித்துவின் வார்த்தைகள் தேர்தல் நடத்த விதிமுறைகளுக்கு மாறானவை, ஒழுக்கக்கேடானவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய அரசமைப்புச் சட்டம் 324 பிரிவின்படி, அடுத்த 72 மணிநேரத்துக்கு சித்து எந்தவிதமான பொதுக்கூட்டங்கள், பேரணிகள், காட்சிக்கூடங்கள், நேர்காணல்கள், பொதுமக்களிடம் பேசுவது ஆகியவற்றை மேற்கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை 23-ம்தேதி காலை 10 மணிமுதல் நடைமுறைக்கு வரும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP