கூட்டணி கட்சியால் காங்கிரசில் உச்சகட்ட கோஷ்டி மாேதல்!

முன்னாள் பிரதமர் தேவகவுடா, தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வரும் லோக்சபா தேர்தலில், தும்கூரில் அவர் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது, காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 | 

கூட்டணி கட்சியால் காங்கிரசில் உச்சகட்ட கோஷ்டி மாேதல்!

முன்னாள் பிரதமர் தேவகவுடா, தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வரும் லோக்சபா தேர்தலில், தும்கூரில் அவர் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது, காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடகாவில், காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து லோக்சபா தேர்தலை சந்திக்கின்ற. இந்த தேர்தலில், தன் பேரன் ரேவண்ணாவை களம் இறக்கியுள்ள முன்னாள் பிரதமர் தேவகவுடா, அரசியலில் இருந்து ஓய்வு பெறுவார் என தகவல் வெளியானது. 

இந்நிலையில், கூட்டணியில், காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட, தும்கூரில், தேவகவுடா போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். 

இது, மாநில காங்., தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தேவகவுடா போட்டியிடுவது பற்றி, காங்., மூத்த தலைவர் ராஜன்னா கூறுகையில், ‛‛தேவகவுடா தேர்தலில் போட்டியிட விரும்பினால், பெங்களூரு வடக்கிலிருந்து போட்டியிடட்டும். அதை விடுத்து, தும்கூரில் போட்டியிடுவது சரியல்ல. 

இங்கு, எங்கள் கட்சி வேட்பாளர்கள் களம் இறங்குவதே சரியாக இருக்கும். அதையும் மீறி அவர் களம் இறங்கினால், காங்.,வேட்பாளராக களம் இறங்கட்டும். அப்போது நாங்கள் அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்வோம்’’ என்றார். 

இந்நிலையில், மாநில துணை முதல்வரும், காங்., மூத்த தலைவருமான பரமேஸ்வர் கூறுகையில், ‛‛தும்கூர் தொகுதி, ம.ஜ.த.,வுக்கு ஒதுக்கவில்லை. தேவகவுடா இப்படி செய்வார் என எதிர்பார்க்கவில்லை. எனினும், எங்கள் கட்சி மேலிடம், அந்த தொகுதியை, அவருக்கு விட்டுத் தர முடிவெடுத்துள்ளது. வேறு வழியின்றி அவரை ஆதரிக்கிறோம்’’ என்றார். 

துணை முதல்வரின் இந்த கருத்து, மாநில காங்கிரசார் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சி மேலிடத்திடம் பேசி, எப்படியும், தும்கூர் தொகுதியை தங்கள் வசப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் திடீரென தேவகவுடாவுக்கு ஆதரவாக பேசியது, அந்த கட்சியில் கோஷ்டி மோதலை அதிகரித்துள்ளது. 
 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP