டெல்லியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு

மக்களவைத் தேர்தலையொட்டி, டெல்லி மாநிலத்தில் உள்ள 7 தொகுதிகளில் 6 இடங்களுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்துள்ளது. மாநில காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித், வட கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார்.
 | 

டெல்லியில்  போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு

மக்களவைத் தேர்தலையொட்டி, டெல்லி மாநிலத்தில் உள்ள 7 தொகுதிகளில் 6 இடங்களுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்துள்ளது.

டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைப்பதற்கு காங்கிரஸ் கட்சி பல்வேறு கட்ட முயற்சிகளை முன்னெடுத்த போதிலும், அவை பலனளிக்கவில்லை. இதையடுத்து தனித்துப் போட்டியிடும் அக்கட்சி சார்பில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் முதல்வரும், மாநில காங்கிரஸ் தலைவருமான ஷீலா தீட்சித், வட கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார். முன்னாள் மாநிலத் தலைவர் அஜய் மாக்கன், புது டெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார். கிழக்கு டெல்லி, சாந்தினி சௌக், மேற்கு டெல்லி, வடமேற்கு டெல்லி ஆகிய தொகுதிகளுக்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இன்னும் ஒரு தொகுதிக்கான வேட்பாளரை காங்கிரஸ் அறிவிக்கவில்லை.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP