காங்கிரஸ் பேச்சும், பாகிஸ்தான் பேச்சும் ஒன்னு - பிரதமர் மோடி

பாகிஸ்தான் பேசக் கூடிய அதே தொனியில்தான் காங்கிரஸ் கட்சி பேசுகிறது. தீவிரவாதிகளை எதிர்த்து போரிடக் கூடிய பலத்தை நமது ராணுவ வீரர்கள் பெற்று விடக் கூடாது என்று காங்கிரஸ் கட்சியும், பாகிஸ்தானும் நினைக்கின்றன என்றார் பிரதமர் மோடி.
 | 

காங்கிரஸ் பேச்சும், பாகிஸ்தான் பேச்சும் ஒன்னு - பிரதமர் மோடி

பாகிஸ்தான் பேசக் கூடிய அதே தொனியில்தான் காங்கிரஸ் கட்சியும் பேசி வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார். மகாராஷ்டிர மாநிலம், லத்தூரில் அவர் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது:

காங்கிரஸ் கட்சிக்கும், அதன் நண்பர்களுக்கும் தேசவிரோத சிந்தனை இருக்கிறது. பாகிஸ்தான் பேசக் கூடிய அதே தொனியில்தான் காங்கிரஸ் கட்சி பேசுகிறது. தீவிரவாதிகளை எதிர்த்து போரிடக் கூடிய பலத்தை நமது ராணுவ வீரர்கள் பெற்று விடக் கூடாது என்று காங்கிரஸ் கட்சியும், பாகிஸ்தானும் நினைக்கின்றன. தீவிரவாதத்தை பரப்ப நினைப்பவர்களும், நாட்டை பிளவுபடுத்த நினைப்பவர்களும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என பாகிஸ்தான் விரும்புவதைப் போல காங்கிரஸும் விரும்புகிறது. நமது பாதுகாப்பு கட்டமைப்பை பலவீனப்படுத்தும் வகையில் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை அமைந்திருப்பது வெட்கக்கேடானது என்றார் மோடி.
newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP