நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார் காங்., தலைவர் ராகுல்

பிரதமர் நரேந்திர மாேடியை, உச்ச நீதிமன்றம் திருடன் எனக் கூறியதாக, மக்கள் மத்தியில் பொய்யான கருத்துக்களை முன்வைத்து பேசிய, காங்கிரஸ் தலைவர் ராகுல், தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டார்.
 | 

நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார் காங்., தலைவர் ராகுல்

பிரதமர் நரேந்திர மாேடியை, உச்ச நீதிமன்றம் திருடன் எனக் கூறியதாக, மக்கள் மத்தியில் பொய்யான கருத்துக்களை முன்வைத்து பேசிய, காங்கிரஸ் தலைவர் ராகுல், தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டார். 

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ரபேல் ரக போர் விமானங்களை வாங்க, பிரான்ஸ் நாட்டுடன் மத்திய அரசு செய்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், தேர்தல் பிரசாரத்தில் பேசிய ராகுல், உச்ச நீதிமன்றம் கூறாததையெல்லாம் பேசி, மக்கள் மனதில் தவறான கருத்துக்களை பதிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். க்ஷ

அதாவது, பிரதமர் நரேந்திர மாேடி குறித்து, உச்சநீதிமன்றம் எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில், உச்ச நீதிமன்றமே, பிரதமர் மாேடியை திருடன் எனக் கூறிவிட்டதாக, ராகுல் பேசினார். அவரின் இந்த பேச்சுக்கு எதிராக, பா.ஜ., சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கில், ராகுல் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்றம் கூறாததை, ராகுல் பேசியதாக ஒப்புக்கொண்டதுடன், அதற்கு ராகுல் தரப்பில் வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறிானார். ஆனால், இதை ஏற்காத உச்ச நீதிமன்றம், ராகுலின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. 

ராகுலின் வருத்தம், வெறும் கண்துடைப்பு நாடகமே என, பா.ஜ., வழக்கறிஞர் மீனாட்சி லேகி வாதிட்டார். இதையடுத்து, நீதிமன்றம் கூறாத ஒன்றை பேசிவிட்டு, அதற்கு வருத்தம் தெரிவிப்பது எந்த வகையில் நியாயம் என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, வேறு வழியின்றி, ராகுல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அவர் சார்பில் மன்னிப்பு கேட்டார். 

வெறும் வாய்வழி மன்னிப்பாக மட்டும் இல்லாமல், அதை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யும்படி, நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP