கோட்சே குறித்த கருத்து : பிரக்யா சிங்கிற்கு பாஜக கண்டனம்

நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என்று போபால் வேட்பாளர் பிரக்யா சிங் கூறியதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
 | 

கோட்சே குறித்த கருத்து : பிரக்யா சிங்கிற்கு பாஜக கண்டனம்

"நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர்" என்று போபால் வேட்பாளர் பிரக்யா சிங் கூறியதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

போபால் வேட்பாளர் பிரக்யா சிங், ‘நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர். அவர் தேசபக்தாராக இருந்தார்; இருக்கிறார்; இன்னும் இருப்பார். கோட்சேவை தீவிரவாதி என்று சொல்பவர்கள் உற்றுநோக்க வேண்டும். அவரை தீவிரவாதி என்பவர்களுக்கு இந்தத் தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்’ என்று இன்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், பிரக்யா சிங்கின் இந்தக் கருத்திற்கு பாஜக செய்தித் தொடர்பாளர் ஜி.வி.எல். நரசிம்மராவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறும்போது, ‘கோட்சே பற்றி பிரக்யா சிங் கூறிய கருத்தில் பாஜகவிற்கு உடன்பாடு இல்லை. பிரக்யா சிங் தனது கருத்துக்கு பொதுவெளியில் மன்னிப்பு கோர வேண்டும். கோட்சே பற்றிய கருத்து தொடர்பாக அவரிடம் பாஜக சார்பில் விளக்கம் கேட்கப்படும்’ என்று கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP