தேர்தலை ஒத்தி வைக்கக் கோரும் முதல்வர்!

ஃபனி புயல் ஒடிஸா அருகே கரையை கடக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த மாநிலத்தின் முதல்வர் நவீன் பட்நாயக் டெல்லி சென்றுள்ளார். தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோராவை சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
 | 

தேர்தலை ஒத்தி வைக்கக் கோரும் முதல்வர்!

ஒடிஸா மாநிலத்தில் ஃபனி புயலால் பாதிக்கப்படும் இடங்களில் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று மாநில முதல்வரும், பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக் வலியுறுத்தியுள்ளார்.

ஒடிஸாவில் மக்களவைத் தேர்தலும், சட்டப்பேரவைத் தேர்தலும் 4 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஃபனி புயல் ஒடிஸா அருகே கரையை கடக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த மாநிலத்தின் முதல்வர் நவீன் பட்நாயக் டெல்லி சென்றுள்ளார். தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோராவை சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

ஃபனி புயல் தாக்கினால், பட்குரா சட்டப்பேரவைத் தொகுதியில் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தேர்தல் ஆணையத்திடம் நவீன் பட்நாயக் முன்வைக்கவுள்ளார்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP