ஜெகன் பதவியேற்பு விழாவை புறக்கணிக்கும் சந்திரபாபு

ஆந்திர மாநில முதல்வராக, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர் ஜெகன் மாேகன் ரெட்டி, நாளை பதவியேற்க உள்ளார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில், மாஜி முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
 | 

ஆந்திராவில் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டசபை தேர்தல்களில், சந்திரபாபு நாயுடுவின் தெலுகு தேசம் கட்சி படுதோல்வி அடைந்தது. இரு தேர்தல்களிலும், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றதை அடுத்து, அந்த கட்சியின் தலைவர் ஜெகன் மாேகன் ரெட்டி, மாநில முதல்வராக நாளை பொறுப்பேற்கிறார். 

இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்கும்படி, முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும், அவர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டார் என்றும், தெலுகு தேசம் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர் ஒருவர், ஜெகன் மாேகனை அவரது இல்லத்தில் சந்தித்து, சந்திரபாபு சார்பில் வாழ்த்து தெரிவிப்பார் என்றும் அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP