மகனுக்கு சீட் கிடைத்ததால் பதவி விலக மத்திய அமைச்சா் விருப்பம்

பாஜக சார்பில் போட்டியிட மகனுக்கு சீட் கிடைத்ததால், தனது பதவியை ராஜினாமா செய்ய மத்திய அமைச்சா் பிரேந்தர் சிங் முன்வந்துள்ளார்.
 | 

மகனுக்கு சீட் கிடைத்ததால் பதவி விலக மத்திய அமைச்சா் விருப்பம்

பாஜக சார்பில் போட்டியிட மகனுக்கு சீட் கிடைத்ததால், தனது பதவியை ராஜினாமா செய்ய மத்திய அமைச்சா் பிரேந்தர் சிங் முன்வந்துள்ளார்.

மத்திய உருக்குத்துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் பிரேந்தர் சிங். அரியானாவை சேர்ந்த முன்னணி காங்கிரஸ் தலைவரான இவர், கடந்த 2014-ம் ஆண்டு காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அவருக்கு மத்திய அமைச்சரவையில் ஊரக மேம்பாடு, பஞ்சாயத்து ராஜ் துறை ஒதுக்கப்பட்டது.

பின்னர் இவர் 2016-ம் ஆண்டு அரியானாவில் இருந்து பாஜக சார்பில் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த ஆண்டு நடந்த அமைச்சரவை மாற்றத்தின் போது, இவருக்கு உருக்குத்துறை ஒதுக்கப்பட்டது.

இந்த நிலையில் நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் பிரேந்தர் சிங்கின் மகனான பிரிஜேந்திர சிங்குக்கு அரியானாவின் ஹிசார் தொகுதியை பாஜக ஒதுக்கி உள்ளது. இது பிரேந்தர் சிங்குக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எனினும் ஒரே குடும்பத்தில் தனக்கும், தனது மகனுக்கும் பதவி கிடைப்பதன் மூலம் வாரிசு அரசியலுக்கு வழி வகுக்கும் என எண்ணிய அவர், தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளார். இது தொடர்பாக கட்சித்தலைவர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP