காங்கிரஸ் சார்பில் களமிறங்கும் பிரபல குத்துச்சண்டை வீரர்!

தெற்கு டெல்லி மக்களவைத் தொகுதியில், பிரபல குத்துண்டை வீரர் விஜேந்தர் சிங் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இதையொட்டி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோருக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
 | 

காங்கிரஸ் சார்பில் களமிறங்கும் பிரபல குத்துச்சண்டை வீரர்!

தெற்கு டெல்லி மக்களவைத் தொகுதியில், பிரபல குத்துண்டை வீரர் விஜேந்தர் சிங் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.

இங்கு பாஜக சார்பில் போட்டியிடும் தற்போதைய எம்.பி.யான ரமேஷ் பிதூரி, ஆம் ஆத்மி கட்சியின் ராகவ் சதா ஆகிய வேட்பாளர்களை எதிர்த்து விஜேந்தர் சிங்கை காங்கிரஸ் கட்சி களமிறக்கியுள்ளது.

இதையொட்டி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோருக்கு விஜேந்தர் சிங் நன்றி தெரிவித்துள்ளார். இத்தனை ஆண்டுகாலம் குத்துச்சண்டை களத்தில் நாட்டுக்கு பெருமை சேர்த்த நிலையில், தற்போது நாட்டு மக்களுக்கு சேவையாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP