எதிரி சொத்துகளை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

எதிரி சொத்து சட்டம், 1968-ன் 8ஏ பிரவின் கீழ் உள்ள உட்பிரிவு 1-ன் படி மத்திய உள்துறை அமைச்சகத்தின் பதிகாப்பு/ இந்திய எதிரி சொத்து பாதுகாப்பு பிரிவின் கீழ் உள்ள எதிரி சொத்து பங்குகளை விற்க ‘கொள்கையளவிலான’ ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
 | 

எதிரி சொத்துகளை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

எதிரி சொத்துகளை விற்பதற்காக நடைமுறை விதிகள் மற்றும் செயல்முறைக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அதன் விவரங்கள்:

எதிரி சொத்து சட்டம், 1968-ன் 8ஏ பிரவின் கீழ் உள்ள உட்பிரிவு 1-ன் படி மத்திய உள்துறை அமைச்சகத்தின் பதிகாப்பு/ இந்திய எதிரி சொத்து பாதுகாப்பு பிரிவின் கீழ் உள்ள எதிரி சொத்து பங்குகளை விற்க ‘கொள்கையளவிலான’ ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதனை விற்க முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை துறைக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அங்கீகாரம் எதிரி சொத்து சட்டம், 1968-ன் 8ஏ பிரவின் கீழ் உள்ள உட்பிரிவு 7-ன் கீழ் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விற்பனையில் இருந்து வரும் வருமானம் மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் வரும் அரசாங்க கணக்கில் பங்கு விலக்க வருமானமாக வரவு வைக்கப்படும்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP