இடைத்தேர்தல் - ராஜஸ்தானில் காங்கிரஸ், ஹரியானாவில் பாஜக முன்னிலை

ராஜஸ்தான் மாநிலத்தின் ராம்கார் சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சியும், ஹரியானா மாநிலம் ஜிந்த் சட்டப்பேரவை தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜ.க.வும் முன்னிலை பெற்றுள்ளன.
 | 

ராம்கார் தொகுதியில் 19ம் சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் 78,413 வக்குகள் பெற்று சுமார் 9,724 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். பா.ஜ.க. 68,689 வாக்குகளையும், பகுஜன் சமாஜ் 23,745 வாக்குகளையும் பெற்றுள்ளன. ஜிந்த் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் கிருஷ்ண மித்தா முன்னிலை பெற்று வருகிறார். அங்கு போட்டியிட்ட காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா பின்தங்கியுள்ளார்.

முன்னதாக ராஜஸ்தானில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றபோது, ராம்கார் தொகுதியில் போட்டியிட்ட பகுஜன் சமாஜ் வேட்பாளர் லக்‌ஷ்மண் சிங் உயிரிழந்தார். இதனால், அத்தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை அங்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 78.9 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. ஜிந்த் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 70 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP