மூன்றாவது அணிக்கு பிரகாசமான வாய்ப்பு: பினராயி விஜயன் கருத்து

‛‛மக்களவை தேர்தல் முடிவுகளில், பா.ஜ., மற்றும் காங்., ஆகிய இரு தேசிய கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்காது. எனவே, மத்தியில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை மூன்றாவது அணி தான் முடிவு செய்யும்’’ என, கேரள முதல்வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயன் கருத்து தெரிவித்துள்ளார்.
 | 

கேரள முதல்வர் பினராயி  விஜயன், செய்தியாளர்களிடம் பேசியதாவது: நடைபெற்று வரும் மக்களவை தேர்தல், வரும் 19ம் தேதி முடிவடைகிறது. அதன் பின், 23ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. இந்த முறை, மத்தியில் ஆளும் பா.ஜ., அரசுக்கு எதிரான மனநிலையில் மக்கள் உள்ளனர். 

அதேசமயம், காங்கிரஸ் கட்சியை அவர்கள் மாற்றாக கருதவில்லை. எனவே, இந்த தேர்தல் முடிவுக்குப் பின், மத்தியில் இந்த இரு கட்சிகளுக்குமே ஆட்சி அமைப்பதற்கான மெஜாரிட்டி கிடைக்கது, எனவே, மத்தியில் ஆட்சி அமைப்பதற்கான அல்லது யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் வாய்ப்பு, மூன்றாவது அணிக்கு பிரகாசமாக உள்ளது. 

தெலுங்கான முதல்வரும், டி.ஆர்.எஸ்., தலைவருமான கே.சந்திரசேகர ராவ், என்னை சந்தித்து பேசினார். மூன்றாவது அணி அமைப்பது குறித்த அவரது யாேசனை சிறப்பானது. எனினும், மூன்றாவது அணி சார்பில் பிரதமர் வேட்பாளர் யார் என்றெல்லாம் பேசவில்லை’’ இவ்வாறு அவர் கூறினார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP